நோர்வே ஒஸ்லோ திங்ரற் நீதிமன்றில் நேற்று நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் நோர்வேயின் பயங்கரவாத சந்தேக நபர் ஆனர்ஸ் பிறீவிக் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் இவருடைய தடுப்புக் காவலை மேலும் 12 வாரங்கள் நீடிப்பு செய்துள்ளார் நீதிபதி. இப்படி தொடர்ந்து தடுப்புக்காவலை நீடிப்பது ஒரு மனநோயாளியின் மண்டைக்குள் பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் இவருக்கு விசேடமாக மூன்று சிறைக் கொட்டடிகளை
ஒதுக்குமாறு நீதிபதி தெரிவித்துள்ளார். நோர்வே குற்றவியல் வழக்கு வரலாற்றில் ஒரு தடுப்புக்காவல் சந்தேக நபருக்கு மூன்று சிறைக் கொட்டடிகள் வழங்கப்படுவது இதுவே முதல்தடவை என்று நோஸ்க் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஒரு கொட்டடியில் இவர் உறங்குவார், இன்னொன்று அவர் ஏதாவது பணி செய்வதற்கும், மூன்றாவது தேகப்பயிற்சி செய்வதற்கும் ஒதுக்கப்படுகிறது. மேலைத்தேய சமுதாய வாழ்வுக் கட்டமைவில் உள்ள அடிப்படைத் தவறுகளை கண்டறிய இவருடைய சாட்சியம் உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக