தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.11.11

தீவிரவாதத்​திற்கு இடமில்லை: லிபியா இடைக்காலத் தலைவர்


abjaleel
திரிபோலி:லிபியா தீவிரவாத நாடாக மாறாது, புதிய தலைவர்களைக்
கொண்டு அரசு அமைக்கும்பணி வரும் வாரத்தில் முடியும் என்று ஐரோப்பிய யூனியனின் தூதுக் குழுவிற்கு லிபிய இடைக்காலத் தலைவர் உறுதி அளித்தார்.தேசிய தற்காலிக குழுவின் தலைவர், முஸ்தபா அப்துல் ஜலில் கடந்த மாதம்
பேசுகையில், புதியலிபிய சட்டம் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை கொண்டே அமைக்கப்படும், கொள்கை மீறல்கள் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது என்று கூறியது மேற்கு உலகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஐரோப்பிய வெளியுறவு கொள்கைத் தலைவரிடம் பேசுகையில், ‘தீவிரவாத நாடாக நாங்கள் இருக்கமாட்டோம், எங்களுடைய இஸ்லாம் நிதானமானது’ என்று கூறினார். மற்ற இடைக்காலத் தலைவர்கள் கூறுகையில்; ஜலில் ஷரியத் சட்டம்
குறித்து தனது சொந்த கருத்தை தெரிவித்துள்ளார். மார்க்கத்தின் பங்கை வெளிப்படுத்தும் புதிய சட்டம் அடுத்த ஆண்டுதான் எழுதப்படும் என்றனர்.
ஐரோப்பிய வெளியுறவு கொள்கைத் தலைவர் கூறுகையில்; பெண்கள் புதிய சட்டத்தில் தங்களது உரிமைகள் பொதிந்திருப்பதை உறுதிசெய்யவேண்டும், ஆண்களுக்கு நிகரான சமஉரிமை பெறவேண்டும் என்றார்.

0 கருத்துகள்: