தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.11.11

இங்கிலாந்தில் வேலைவாய்ப்புகள் குறைகின்றது!

லண்டன், நவ. 16-  ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி காரணமாக, இங்கிலாந்தின் பல்வேறு நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு பணியாளர்களை சேர்க்கும் திட்டங்களை ஒத்தி வைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் இங்கிலாந்தில் புதிய வேலை வாய்ப்புகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்துள்ளது.நாட்டின் பொருளாதாரம் குறித்து
நிச்சயமற்ற நிலை நிலவுவதால், பல்வேறு துறைகளையும் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், தங்களது விரிவாக்கத் திட்டங்களை ரத்து செய்துவிட்டதோடு, பணியாளர் சேர்ப்பையும் குறைக்க ஆரம்பித்துள்ளன.
அரசுத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களும் கூட தேவையற்ற செலவுகளைக் குறைக்க ஆரம்பித்துள்ளன. தொழிலாளர்களின் பல்வேறு சலுகைகளையும் குறைக்க ஆரம்பித்துள்ளன. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களும், தங்களது பணிகளை செலவு குறைவான பிற நாடுகளுக்கு அவுட் சோர்ஸ் செய்வது குறித்தும் ஆராய்ந்து வருகின்றன. இதன்மூலம் செலவைக் குறைக்க அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதால், இங்கிலாந்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாவது குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வேலையின்மை விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது. இப்போது நிலவும் ஐரோப்பிய பொருளாதாக சிக்கல்களாலும், இங்கிலாந்தின் வளர்ச்சி விகிதம் சரிந்து வருதாலும், இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
வரும் 2012ம் ஆண்டின் மத்திய காலத்தில் வேலைவாய்ப்பின்மை 8.7 சதவீதமாக உயர்ந்து, சுமார் 27 லட்சம் பேர் வேலையில்லாமல் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: