புதுடெல்லி, நவ. 16- காஷ்மீர் ராணுவ அதிகார சட்ட விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மேலிட குழு தலைவர்களுடன் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
காஷ்மீர் மாநிலத்தில் அமலில் உள்ள ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை சில மாவட்டங்களில் வாபஸ் பெறுவது என்று,
முதல்-மந்திரி உமர் அப்துல்லா முடிவு செய்துஇருக்கிறார்.இதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோருடன் உமர் அப்துல்லா ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிட குழு தலைவர்களுடன் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இந்த பிரச்சினை குறித்து நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்கள்.
1-1/2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத்தும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியான குலாம்நபி ஆசாத், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். தனி தெலுங்கானா மாநில போராட்டம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
22-ந் தேதி தொடங்க இருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தெலுங்கானா உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக