சேனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களம்ஆவண திரைப்படம், சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் மாநகரிலும், திரையிடப்பட்டுள்ளது.அச்சுறுத்தப்பட்ட இனங்களுக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு, கடந்த 10ம் திகதி நடைபெற்றுள்ளது. சுவிஸ் ஈழத்தமிழரவையின் தலைவி செல்வி தர்சிகாப் அகீரதன், லுற்சன் மாநில பாராளுமன்ற உறுப்பினர் லதன்
சுந்தரலிங்கம், பசுமை கட்சியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் லாங், ஜேர்மனிக்கான சிறிலங்காவின் விசேட தூதுவர் சரத் கொங்ககாகோ என பலரும் கலந்து கொண்டு இலங்கை நிலைமை தொடர்பில் தமது கருத்துரைகளை வழங்கியுள்ளனர்.
சேனல் 4 தயாரித்த குறும்படம், திரையிடப்பட்ட பின்னார் அது தொடர்பில் கருத்துரைத்த இலங்கை தூதுதுவர், அது போலியானது எனவும், அதற்கு மறுதலித்த சிறிலங்கா அரசின் காணொளி ஒளிபரப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
எனினும், அதனை நம்ப மறுத்த பார்வைளர்கள், தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை உணர்ந்தவர்களாக காணப்பட்டுள்ளனர்.
பார்வையாளர்களில் ஒரு சுவிஸ் நாட்டவர், ராஜபக்ச - அடுத்த கடாபி என வாசகங்களை தாங்கிய பதாயை வைதிருந்தார். ஈழத்தமிழரவை பிரதிநிதிகளும், சிறீலங்கா அரசு தரப்பு பிரதிநிதிகளும் இவ்வாறு முதன்முறையாக ஒரே நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகள் ஆயிரத்துக்கும் அதிகமானோர், இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தகக்து.
இதேவேளை சேனல் 4 வின் இலங்கையின் கொலை களம் ஆவணதிரைப்படத்திற்கு ஆரோக்கியமான வரவேற்பு கிடைத்துள்ளதால், தனது அடுத்த பாகத்தை, 'தண்டிக்கப்படாத குற்றங்கள்' எனும் தலைப்பில் தயாரித்து வருகிறது. அடுத்த வருடம் இப்புதிய பாகம் வெளியிடப்படும் எனவும், போர்க்குற்றம் புரிந்துவிட்டு, சட்டத்தின் முன் தண்டிக்கப்படாது சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் பலரது முகமூடியை இவை கிழித்தெறியும் எனவும் சேனல் 4 ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக