தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.11.11

பஹ்ரைன் நாட்டில் நடைபெற இருந்த பயங்கரவாத சதி முறியடிப்பு!


பஹ்ரைனிலுள்ள சவூதி அரேபியாவின் தூதரகம்,சவூதி பஹ்ரைன் இணைப்பு "கிங்ஃபஹத் கடற்பாலம்" உள்ளிட்ட முக்கியமான இடங்களைத் தகர்க்க முயன்ற தீவிரவாத கும்பலை கத்தர் நாட்டின் காவல்துறை கைது செய்துள்ளது. இத்தகவலை பஹ்ரைன் நாட்டின் உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அந்தப் பட்டியலில் பஹ்ரைன் உள்துறை அமைச்சகமும் இருந்துள்ளது.மேலும் சில பிரமுகர்களும் குறி வைக்கப்பட்டிருந்தனர். சவூதி அரேபியாவிலிருந்து சென்ற இந்த நால்வர் கும்பலை சோதனைச் சாவடி ஒன்றில் பரிசோதித்த கத்தர் காவல்துறை கைது செய்து  பஹ்ரைன் - மனாமாவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளது. அந்த நால்வரின் தகவலின் பேரில், ஐந்தாவதாக ஒருவர் பஹ்ரைனில் கைது செய்யப்பட்டுள்ளார்." என்று பஹ்ரைன் உள்துறை அதிகாரி ஜெனரல்.தாரிக் அல் ஹசன் தெரிவித்தார். 

"சோதனையின் போது அவர்களிடமிருந்த கணினியை ஆராய்ந்ததில் இது பற்றி தெரியவந்தது அவர்களிடம் அமெரிக்க டாலர்கள்,மற்றும் ஈரானிய ரியால்கள் இருந்தன. மேலும் பஹ்ரைனிலிருந்து வெளியேறி ஈரான் சென்ற அவர்கள் தீவிரவாத அமைப்பு ஒன்றை நிறுவியிருந்ததாகத் தெரிகிறது" என்ற அதிகாரி "விரைவில் நீதிமன்ற விசாரணக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: