சிரியாவில் பொது மக்கள் மீது தாக்குதலை நடாத்தி சராசரி நாளுக்கு 50 பேர் வீதம் கொன்று குவித்துவரும் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாத்துக்கு வெறும் மூன்றே மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்துள்ளது நேற்றுக் கூடிய அரபு லீக். வரும் மூன்று தினங்களுக்குள் பொது மக்கள் மீது நடாத்தும் அத்தனை தாக்குதல்களையும் நிறுத்தி, கொலைகார இராணுவத்தை பின்வாங்கச் செய்ய வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளது. செய்யத் தவறினால் சிரியாவிற்கு எதிராக பொருளாதார
தடை விதிக்க நேரிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிவித்தலை அரபுலீக்கின் 22 நாடுகளின் சார்பில் கட்டார் பிரதமர் ஜசீம் அல்தானி அறிவித்துள்ளார். அரபுலீக் விடுத்துள்ள எச்சரிக்கை உலகத்தின் வெத்துவேட்டு நாடுகள் பலதிற்கு ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது. தமது பிராந்தியத்தில் எவ்வளவோ பேரழிவுகள் நடைபெற ஊமைகளாக இருந்த இவர்கள் தங்களுடைய இயலாமை மிக்க அறிவை எண்ணி வருந்த அரபுலீக்கின் குரல் ஒரு தூண்டுதலாக இருந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக