தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.11.11

குவைத் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஆர்பாட்டக்காரர்


மத்திய கிழக்கில் ஆரம்பித்துள்ள போராட்டம் ஏவல் பேய் கூரையைப் பிடுங்கியது போல அமெரிக்க ஆதரவு பெற்ற குவைத்திற்குள்ளும் நேற்று நுழைந்தது. குவைத் பாராளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்த ஆயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர் பாராளுமன்ற கதவை உடைத்து வீழ்த்தி உள்ளே நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் குவைத் ஆளும் கட்சி நடாத்தும் ஊழலுக்கு எதிராகக் களமிறங்கியவர்களாகும். இந்த ஆர்பாட்டங்களின் பின்னணியில்
எதிர்க்கட்சி அரசியல்வாதியான முஸலாம் அல் பராக் இருந்தாகக் கூறப்படுகிறது. குறுகிய அறிவித்தலில் இந்த ஆர்பாட்டம் நடந்த காரணத்தால் உறங்கிக் கிடந்த போலீசார் வழிப்படைய முடியாமல் போய்விட்டது. இல்லாவிட்டால் ஆர்பாட்டக்காரர் பாரிய எதிர்வினையை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும் என்பது தெரிந்ததே. இதுபோல சதாம் உசேனின் படைகளும் குவைத்திற்குள் அதிரடியாக நுழைந்தது தெரிந்ததே. போலி ஜனநாயகம் நிலவும் நாடுகளில் ஆர்பாட்டம் செய்வது மிகவும் ஆபத்தானது என்றாலும், பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல எதிர்க்கட்சி தலைவர் நடாத்திய நாடகம் இதுவாகும். எவ்வாறாயினும் குவைத்தில் ஊழல் ஆட்சி நடக்கிறது என்ற விடயத்தை இந்த நிகழ்வானது அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

0 கருத்துகள்: