சிரியாவில் பொது மக்களுக்கு எதிராக படைகளை ஏவி படுகொலைகளை செய்துவரும் சர்வாதிகாரி அல் ஆஸாட்டின் ஆட்சிக்கு எதிராக தடைகளை விதிக்கும் பிரேரணை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு வந்தது. பொது மக்கள் நடாத்தும் போராட்டத்தை அனுமதிக்க மறுத்த குற்றத்திற்காகவும், அவர்களை கொன்றொழிக்கும் குற்றத்திற்காகவும் சிரியா மீது தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு
பாதுகாப்பு சபைக்கு வந்த பிரேரணையை ஒன்பது நாடுகள் ஆதரித்தன, ஆனால் ரஸ்யாவும், சீனாவும் இதை எதிர்த்து வாக்களித்துள்ளன. இவை தமது வீட்டோ அதிகாரத்தை பாவித்த காரணத்தால் இப்பிரேரணை தோல்வியடைந்துள்ளது. இதுபோல லிபியா மீது நேட்டோ தாக்குதல் நடாத்துவதற்கு அனுமதியளித்த பிரேரணைக்கு எதிராக ரஸ்யா வீட்டோ பாவிக்காமல் போனது அதிர்ஸ்டவசமான நிகழ்வாகும். ரஸ்ய அதிபராக டிமிற்ஜி மிடேவ் இருந்து எடுத்த முடிவு அது. ஆனால் புதிதாக புற்றின் அதிபர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இவர் வென்றால் உலகில் நடைபெறும் ஜனநாயக போராட்டங்களுக்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் பலத்த நெருக்கடிகள் வரும். மேலும் மக்கள் போராட்டத்தை சந்திக்கும் விளிம்பு நிலையில் சீனா – ரஸ்யா ஆகிய இரு கம்யூனிச நாடுகளும் தம்மைப்போன்ற பேர்வழிகளை பாதுகாத்து வருகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக