ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்தவர் சையது முகமது யூசுப் ஷா. இவர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா வீட்டு வேலைக்காரராகவும் இருந்து உள்ளார். பண விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் போலீஸ் காவலில் இருந்தபோது மர்மமாக இறந்தார்.
இது தொடர்பாக எதிர்கட்சியினர் சட்டசபை கூட்டத்தில் கடும் அமளியில் ஈடுபட்டும், உமர் அப்துல்லா பதவி விலக வேண்டும என்றும் கூறிவருகின்றனர். இதனால் நீதி விசாரணைக்கு உத்தரவு விடப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா:-
சையது மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவுவிடப்பட்டுள்ளது. அதிலிருந்து உண்மை வெளிவரும். இதில் மறைக்க ஏதும் இல்லை. வேறு என்ன சொல்ல வேண்டும் என விரும்பிகிறீர்கள். அரசியல் ஸ்டண்ட் காரணமாக உமர் அப்துல்லா பதவி விலக வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக