தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.10.11

நரேந்திர மோடி அரசு தரப்பு மனு நிராகரிப்பு- நீதிபதி வி.கே.வியாஸ்


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கெதிராக இனக்கலவரம் ஏற்பட்டது. அப்போது, முதல்வர் நரேந்திர மோடி, போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, "கலவரத்தை அடக்க வேண்டாம். இந்துக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும்' எனக் கூறியதாக, குஜராத் மாநில காவல் உயர் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார்.
ஆனால், முதல்வர் கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவில்லை என காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். முதல்வர் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதற்கு, கான்ஸ்டபிள் கே.டி.பந்த் சாட்சி என, சஞ்சீவ் பட் தெரிவித்திருந்தார்.
ஆனால், "முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறும் படி சஞ்சீவ் பட் என்னை மிரட்டி எழுதி வாங்கினார்' என, கே.டி.பந்த் சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து, சஞ்சீவ் பட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார் இந்த விவகாரம் தொடர்பாக, சஞ்சீவ் பட் தற்போது சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பிணை கோரி சஞ்சீவ் பட் மனு செய்துள்ளார். ஆனால், "சஞ்சீவ் பட்டை காவலில் எடுப்பது தொடர்பான வழக்கு மற்றொரு நீதிமன்றத்தில் நடப்பதால் அவருக்கு பிணை அளிக்கக்கூடாது என்று நரேந்திரமோடி அரசு தரப்பில் மனு செய்யப்பட்டது.
ஆனால், சஞ்சீவ் பட்டின் பிணை கோரும் மனுவை ஏற்பதாகவும், அரசு தரப்பு மனு நிராகரிக்கப்படுவதாகவும் நீதிபதி வி.கே.வியாஸ் தெரிவித்தார். இதை தொடர்ந்து சஞ்சீவ் பட்டுக்கு பிணை கிடைக்கும் என்று தெரிய வருகிறது.

0 கருத்துகள்: