நரைத்த முடி என்பது உலகம் முழுதும் பெரிய சவாலக இருக்கிறது. இதனால் “ஹேர் டை” தொழிற்சாலை இன்று உலக அளவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம், இன்னும் 4 ஆண்டுகளில் வெளிவரும் ஒரு மாத்திரை நரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று விஞ்ஞானிகள் சிலர் கோரியுள்ளனர்.
பெயரிடப்படாத பழம் ஒன்றின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரை இன்னும் 4 ஆண்டுகளில் விற்பனைக்கு வந்து விடும் என்று இந்த விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.காஸ்மெடிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் முதன்மை நிறுவனமான ஓரியல் (க’ஞழ்ங்ஹப்) இந்த புதிய மாத்திரையை கண்டுபிடித்துள்ளது. 10 ஆண்டுகள் இடைவிடாத ஆராய்ச்சிக்குப் பிறகு இப்போது நரை முடிக்கு டாடா என்று இவர்கள் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்கள்.
800கோடி பவுண்டுகள் தொகை கொண்ட உலகின் “டை” சந்தைக்கு ஆப்பு வைத்துள்ளதாக ஓரியல் நிறுவனம் பெருமை பட்டுக் கொண்டுள்ளது.
ஆய்வில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தின் உயிரியல் துறை தலைவர் புரூனோ பெர்னர்ட், “இந்த புதிய நரைதடுப்பு மாத்திரைக்கு ஆண்கள் முதல் பெண்கள் வரை உலகம் நெடுகிலும் மிகப்பெரிய சந்தை இருக்குமென்று எதிர்பார்க்கிறோம். இது விலை அதிகமில்லை என்றும் தினசரி உணவு எடுத்துக் கொள்வது போல் இதனை எடுத்துக் கொண்டால் போதுமானது” என்றார்.
உடலில் உள்ள தீங்கான புரோட்டின்களுடன் முடி செல்கள் வினையாற்றும்போது நரைத்த முடி தோன்றுகிறது. தற்போது அடையாளம் தெரியாத இந்தப் பழத்திலிருந்து எடுக்கப்படும் சாறில் உள்ள ஒரு சத்து முடி நரையை தூண்டிவிடும் சுரப்பியை ஒத்ததாக இருப்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
“நரை முடி தோன்றுவதற்கு முன்னால் இந்த மாத்திரையை தினமும் எடுத்துக் கொண்டால் நரை ஏற்படுவதை தடுக்க முடியும். ஆனால் முடி நரைத்த பிறகு அதனை மீண்டும் கறுப்பாக இந்த மாத்திரை ஆக்குமா என்பது சந்தேகமே” என்கிறார் பெர்னர்ட்.
10 ஆண்டுகள் இந்த மாத்திரை சந்தையில் புழங்கிய பிறகே இதன் சக்தி பற்றி தெரியவரும் என்று இவர்கள் கூறுகின்றனர்.
2013ஆம் ஆண்டு மே மாதம் விஞ்ஞான மாநாட்டில் இது எப்படி தயாரிக்கப்பட்டது, இந்த விஞ்ஞானிகளின் கோரலில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரியவரும்.
பிராட்ஃபோர்ட் பலகலையில் பணியாற்றி வரும் பேராசிரியர் டெஸ் டாபின் என்ற தோல்நோய் நிபுணர் இது பற்றி கூறுகையில், “சுரப்பியை மாற்றினால் நரை நின்று விடும் என்பது பற்றி தெளிவாக இல்லை. ஆனால் இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் பெர்னட் குழுவினருக்கு இது பற்றிய அறிவு அதிகம், மயிர்க்கால்கள் எவ்வாறு வேலை செய்கிறது என்பதில் இவர்கள் நிபுணர்கள்” என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக