தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.10.11

சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்ய மனித உரிமைக் குழுவின் தலைவர் கவர்னருக்கு கோரிக்கை


மும்பை:மும்பையை சேர்ந்த மனித உரிமைக் குழுவின் தலைவர் பரீத் அஹ்மத், ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை விடுதலை செய்யக்கோரியும், அவரது குடும்பத்தின் பாதுக்காப்புக்காவும் குஜாராத் கவர்னர் டாக்டர் கமலா பெனிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது; ‘சஞ்சீவ் பட்டின் கைது  2002-ல் நடந்த குஜாராத் கலவரத்தின் முக்கிய சாட்சிகளை அச்சுறுத்துவதற்க்காகவும், இந்த
வழக்கில் இருந்து நீதியின் வாயை  முதலமைச்சர் மோடியால் கட்டுபடுத்த முடியவில்லை அதனால் இப்படி ஒரு திடீர் நடவடிக்கை’ என்றும் தெரிவித்தார்.
திரு.சஞ்சீவ் பட் அவர் ஒருமூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் மோடிக்கு எதிராக கொடுக்கப்பட்ட இஹ்சான் ஜாஃப்ரியின் படுகொலை குற்ற வழக்கில் ஒரு முக்கிய சாட்சியுமான இவருடன் சேர்த்து 61  முக்கிய சாட்சிகளும் நியாயமற்ற முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜாராத் காவல் துறையின் முழுக் கட்டுப்பாடும்  மோடியின் கீழ் உள்ளதால், குற்றத்திற்கு எதிராக துணிந்து பேசிய நேர்மையான உயர் அதிகாரியையும், இவரை போன்ற முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தவும், இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’ என்றும் எழுதி இருந்தார்.
மேலும் சஞ்சீவ் பட்டை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பு படை அளிக்க கோரியும், குற்றவாளியான நரேந்திர மோடியை கைது செய்வதன் மூலம் தான் அவரால் உண்மையின் வாயை அடைக்க முடியாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.

0 கருத்துகள்: