பூமியை மிக அருகில் சுற்றி வரும் 93 சதவீத விண்கற்களை கண்டுபிடித்துவிட்டதாகவும் அவற்றால் பூமிக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம்
கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வைஸ்என்ற விண்கலம் விண்கற்கள் செயற்கைகோள்கள் நட்சத்திரங்கள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட வைஸ்என்ற விண்கலம் விண்கற்கள் செயற்கைகோள்கள் நட்சத்திரங்கள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகிறது.
பின்னர் நியோ-வைஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்த விண்கலம், கடந்த 2 ஆண்டுகளில் செவ்வாய்மற்றும் வியாழன் கிரகங்களிடையே சுற்றி திரியும் 1 லட்சத்திற்கு மேலான பொருட்களை குறித்த தகவல்களைஅளித்துள்ளது. இந்த செயற்கைகோள் மூலம் பூமியை மிக அருகில் சுற்றி வரும் 981 விண்கற்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 911 விண்கற்கள் முந்தைய ஆராய்ச்சிகளால் கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் அப்போது அவற்றால்பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பூமியில் இருந்து 10 கி.மீ. தொலைவை தாண்டியேவலம் வருவதாக தெரிகிறது. இவற்றால் பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
இவற்றில் ஏதாவது அபாயகரமாக பூமியை நோக்கி வந்தால் அது குறித்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கதயாராக இருப்பதாக, நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக