தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.11

தயாநிதி மாறன் வீட்டு வாசலில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடும் வாக்குவாதம்: அனுமதி மறுக்கப்பு


தயாநிதிமாறன் வீட்டில் சோதனை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிகாலை 6.55 மணிக்கெல்லாம் போட் கிளப் முதல் அவென்யூவில் உள்ள தயாநிதி மாறன் வீட்டுக்கு சென்றனர். ஆனால் வாசலில் நின்ற செக்யூரிட்டி அவர்களை உள்ளே விடவில்லை. உடனே சி.பி.ஐ. அதிகாரிகள் எங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் உன்னை நான் கைது செய்ய வேண்டிவரும் என்று எச்சரித்தார். உடனே வீட்டுக்குள் சென்று தகவல் கூறிவிட்டு வருவதாக சென்ற செக்யூரிட்டி 30 நிமிடமாக வெளியில் வரவில்லை.
 
இதற்கிடையே வேலைக்காரர் ஒருவர் தயாநிதி வீட்டுக்கு வந்தார். அந்த வேலைக்காரரை மட்டும் கேட்டை திறந்து வீட்டுக்குள் விட்ட செக்யூரிட்டி, சி.பி.ஐ. அதிகாரிகளை உள்ளே விட மறுத்தார். இதனால் சி.பி.ஐ. அதிகாரிகள், செக்யூரிட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கோபத்துடன் மிரட்டிய பிறகு அவர்களை செக்யூரிட்டி உள்ளே விட்டார்.
 
போட் கிளப் பகுதி எப்போதுமே, மிக மிக அமைதியாக இருக்கும் அங்குள்ள பிரமாண்ட பங்களாக்கள் நிசப்தமாக இருக்கும். இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென வந்து கலாநிதி, தயாநிதி வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தும் சோதனையை நேரடி ஒளிபரப்பு செய்ய 7 தொலைக்காட்சி சானல்கள் வாகனங்களுடன் போட் கிளப் அவென்யூகளில் அணி வகுத்தன.
 
தி.மு.க. பிரமுகர்களும் கார்களில் வந்து குவிந்தனர். இதனால் போட் கிளப் பகுதியில் நீண்ட நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. அடுத்தக்கட்ட அதிரடிக்கு தயாராகி வருகிறது. அதற்கு பூர்வாங்கமாக முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் மீது சி.பி.ஐ. எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது. ஸ்பெக்ட்ரம் விற்பனை மூலம் அவரும், சன் டி.வி.யும் அடைந்த ஆதாயம் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 12.30 மணி அளவில் பைல்கள் அடங்கிய கோப்புகளுடன் ஒருவர் உள்ளே சென்றார். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதிமாறன் தனது குடும்ப நிறுவனமான சன் டி.வி.க்கு முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான விசாரணைக்காக இந்த பைல்கள் எடுத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
 
சி.பி.ஐ. அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பின்னரே அது பற்றிய தகவல்கள் தெரியவரும்.

0 கருத்துகள்: