சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். அவர் பதவி விலக வலியுறுத்துகின்றனர். போராட்டத்தை ஒடுக்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதலில் இதுவரை 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிரியாவில் குர்தீஷ் எதிர்க்கட்சி தலைவர் மெஷால் திரிமோ கொல்லப்பட்டார்.
இது ஜெர்மனியில் வாழும் சிரியா மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு தலைநகர் பெர்லினில் உள்ள
சிரியா தூதரகத்துக்கு 30 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் தடுத்தனர். அதை மீறி தூதரக காம்பவுண்டு சுவரை இடித்தும், கேட்டை உடைத்தும் அக்கும்பல் உள்ளே புகுந்தது. அப்போது சிரியா தூதர் அங்கு இருந்தார். அவரை முற்றுகையிட்டு தகராறு செய்தனர். தூதரகத்தின் மீது வெடிகுண்டு மற்றும் கற்களால் வீசி தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து தூதரை மீட்டனர்.பின்னர் அவர்களை தூதரகத்தில் இருந்து வெளியேற்றினர். அதே நேரத்தில் ஜெர்மனியின் துறைமுக நகரமான ஹாம்பர்க்கிள் உள்ள சிரியா தூதரக அலுவலகத்திலும் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அதில் கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிரியா மக்களின் இந்த தாக்குதலுக்கு ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி குயிடோ வெஸ்பர் வெலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் இருக்கும் சிரியா தூதரகங்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி தவிர ஐரோப்பிய நாடுகளில் உள்ள மற்ற சிரியா தூதரக அலுவலகங்களிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.1 1
0 கருத்துகள்:
கருத்துரையிடுக