தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.11

கிங்ஃபிஷர் குறைந்த கட்டண விமானங்கள் நிறுத்தம் – விஜய் மல்லையா அறிவிப்பு!


mediumபெங்களூர்: தொடர் நஷ்டம் காரணமாக கிங்பிஃஷர் நிறுவனத்தின் குறைந்த கட்டண சேவைப் பிரிவான ‘கிங்பிஷர் ரெட்’-ஐ மூடிவிடப் போவதாக அதன் தலைவர் விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய விமானத் துறையில் கணிசமான பங்கை விஜய் மல்லையாவின் கிங்பிஷர் பெற்றது. ஏர் டெக்கனை கிங்பிஷர் ரெட் என்று பெயர் மாற்றி இயக்கியது.
2006-ம் ஆண்டு விமானசேவையைத் தொடங்கியது கிங்பிஷர். அடுத்த சில
ஆண்டுகளில், அன்றைக்கு பிரபலமாக இருந்த குறைந்த கட்டண விமான நிறுவனமான கோபிநாத்தின் ஏர் டெக்கனை வாங்கியது.
ஆனால் அந்த சந்தோஷம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரிவு நஷ்டத்திலேயே இயங்கியது. கடந்த 2010-ன் மூன்றாம் காலாண்டில் ரூ 187 கோடி நஷ்டத்தைச் சந்தித்த கிங்பிஷர் ரெட், இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் காலாண்டில்  ரூ 263.54 நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், நிறுவனத்தின் கடன் சுமை ரூ 6000 கோடியாக உயர்ந்துவிட்டது.
இந்த சிக்கல்களிலிருந்து விடுபட, சில முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளது கிங்பிஷர். இதுகுறித்து விஜய் மல்லையா இன்று பெங்களூரில் நிருபர்களைச் சந்தித்த மல்லையா கூறுகையில், “குறைந்த கட்டண விமான சேவை லாபம் தரும் என்ற நம்பிக்கை எனக்குப் போய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை மற்றும் குறைந்து கொண்டே போகும் ரூபாய் மதிப்பு. எனவே தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க விரும்பவில்லை. கிங்பிஷர் ரெட் சேவை நிறுத்தப்படுகிறது,” என்றார்.
ஏற்கெனவே கிங்பிஷர் நிறுவன ஆடிட்டர்கள், நிறுவனத்தின் மதிப்பு முற்றாக குறைந்துவிட்டதாகவும், புதிய மூலதனத்தைச் செலுத்துவது அவசியமென்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கிங்பிஷருக்கு புதிதாக ரூ 2000 கோடியை முதலீடாக செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான உரிமைப்பங்குகள் வெளியிட இயக்குநர் குழு அனுமதித்திருப்பதாகவும் கடந்த ஆகஸ்டில் மும்பை பங்குச் சந்தைக்கு தகவல் அளித்திருந்தது கிங்பிஷர்.
இப்போது மல்லையாவின் புதிய அறிவிப்பு மூலம் கிங்பிஷரின் பங்குகள் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனால், கிங்பிஷர் விமான சேவையில் 70 சதவீத வருமானம் குறைந்தகட்டண சேவை மூலமே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: