தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.10.11

உலகப் புகழ்பெற்ற பிக் பென் கடிகாரம் 45 செ.மீ சரிந்தது


டென்மார்க் 10.10.2011 திங்கள் மதியம்
( புகைப்படம் உண்மையானது அல்ல )
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ற்மினிஸ்ரர் சதுக்கத்தில் ஆங்கில ஆட்சியின் அடையாளச் சின்னமாக நிற்கும் பிக்பென் கடிகாரம் 45 செ.மீ அளவு சரிவடைந்துள்ளது. இதனுடைய கோபுர உச்சி முன்பு இருந்த நிலையோடு ஒப்பிட்டால் 0.26 பாகை சரிவு கண்டுள்ளது. இதைச் சீர்செய்ய முயலும் பணிகளில் இங்கிலாந்து நிலத்தடி ஊழியர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்தக் கடிகாரத்தைப் பார்க்க வருடந்தோறும் பெருந்தொகையான மக்கள் வருகிறார்கள். இவர்களுடைய பாதுகாப்பிற்கு இது அச்சம் ஏற்படுத்துமா என்பது
குறித்த விபரமான தகவல்களை வரும் நாட்களில் அறியலாம். இதுபோல இத்தாலியில் உள்ள பைசா கோபுரமும் சரிந்துள்ளது. இதனுடைய சரிவின் அளவு 4 பாகையாக இருக்கிறது. இதனுடன் ஒப்பிட்டால் பிக் பென்னில் ஏற்பட்டுள்ள சரிவு சிறியதே. ஆனாலும் கட்டிட வரலாற்றாளருக்கு இந்தச் சரிவு அச்சமூட்டும் ஒரு பௌதிக கேள்வியாகவே அமையப் போகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் உலகின் உயரமான கட்டிடங்களை அமைப்போர் இந்த சரிவு குறித்த புதிய கணக்குகளை சேர்க்க வேண்டிய தேவை ஏற்படும். மேலும் அமெரிக்காவில் உள்ள இரட்டைக் கோபுரங்கள் அமெரிக்க உளவுப்பிரிவாலேயே திட்டமிட்டு இடிக்கப்பட்டதாகவும், இரட்டைக் கோபுரங்கள் ஒரேயடியாக தரைமட்டமாக முடியாது என்றும் பலர் கூறுகிறார்கள். இரட்டைக் கோபுரங்களில் இது போன்ற சரிவு ஏற்பட்டது முன்னரே கண்டறியப்பட்டதா..? அதற்காகத்தான் செப் 11 தாக்குதல் நாடகம் நடாத்தப்பட்டதா..? என்ற கோணத்தில் ஒரு தேடுதல் நடாத்தினால் மேலும் பல புதிய தடயங்கள் கிடைக்கலாம். மேலும் பிரிட்டன் பொருளாதாரம் சரிவடைய அது போல பிக் பென்னும் சரிந்திருப்பது இன்னொரு வேடிக்கையாகும்.

0 கருத்துகள்: