வரும் உள்ளாட்சித் தேர்தலை சென்னை மாநகராட்சி வாக்குப்பதிவை வீடியோ படம் எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தி.மு.க.வை சேர்ந்த பூங்குன்றன், மதன்மோகன் மற்றும் சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். உள்ளாட்சி
தேர்தலை மத்திய போலீஸ் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
இம்மனுக்கள் மீதான நேற்றைய விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவை வீடியோ படம் எடுக்கவேண்டும். மாநிலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை அக்.15-க்குள் முடிவு செய்ய வேண்டும்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெளிமாநில போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மத்திய போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை என்றும் உத்தரவிட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக