தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.10.11

சென்னை மாநகராட்சியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடியோ பதிவு


சென்னை, அக்.15: சென்னை மாநகராட்சியின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அன்று வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி திமுக வேட்பாளர்கள் 100 பேர் மேற்கொண்ட வழக்கில், சென்னையின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு அன்று வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனையேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் வழங்கிய தீர்ப்பை தேர்தல் ஆணையம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. இந்தத் தீர்ப்பு தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் வலிமையத் தந்துள்ளது.
நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்துகளை நூறு சதவீதம் நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதவினை முழுமையாக வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயனுக்கும் உரிய ஆணைகள் இடப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: