சிரிய அதிபர் அல் அசாத்தை பதவி விலக கோரி, கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து
நடைபெற்று வந்த ஆர்ப்பாட்ட பேரணிகளின் ஏற்பட்ட போது கலவரங்களில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3000 ஐ எட்டியுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
உயிரிழந்தோரில் குறைந்தது 187 சிறுவர்களும்
அடங்குவார்கள் எனவும், கடந்த 10 நாட்களில் மாத்திரம், 100 ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐ.நா மனித உரிமை பணிப்பாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.உயிரிழந்தோரில் குறைந்தது 187 சிறுவர்களும்
மேலும் சிரிய இராணுவத்தினால் இந்த இரக்கமற்ற அடக்குமுறை தொடருமாயின், நாட்டை முழுமையாக சேதப்படுத்தும் சிவில் யுத்தம் ஒன்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனினும்போரளி குழுக்களே, இக்கலவரங்களை ஊக்குவிப்பதாகவும், பாதுகாப்பு படையிலிருந்து 1,1000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், அரசு தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது
கடந்த வாரம், சிரியாவுக்கு எதிராக ஐ,நாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணையை சீனா மற்றும் ரஷ்யா தமது வீற்றோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்திருந்த போதும், அந்நாடுகளும் சிரிய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தன. அசாத் அரசு மீதான பொறுமையை தாமும் இழந்து வருவதாகவும் அவை எச்சரித்திருந்தன.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை, அரச பாதுகாப்பு படையினருக்கும், ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சிரிய கலவரங்களின் போது குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் 25 பேர் இராணுவ வீரர்கள் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் பனாஷ் நகரிலேயே அதிக கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, நேற்று முன் தினம் (புதன்கிழமை) சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் அதிபர் அசாத் அலிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிரிய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக கடந்த வாரம், பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் இணைந்து கண்டன தீர்மானம் ஒன்றை முன்வைத்தன. இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட போது, இத்தீர்மானத்துக்கு எதிராக ஐ.நா சபையின் நிரந்தர நாடுகளான சீனா, ரஷ்யா ஆகியன வீட்டோ எனும் விசேட மறுப்பாணையை பயன்படுத்தி, இத்தீர்மானத்தை நிராகரித்திருந்தன.
இது குறித்து, ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சூசன் ரைஸ் கண்டனம் வெளியிட்டதுடன், சிரிய பிரச்சினைக்கு ரஷ்யாவும், சீனாவும் தனது வீற்றோ அதிகாரத்தை பயன்படுத்தியது பேரவமானம் என தெரிவித்திருந்தார்.
லிபியாவுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்காத சீனாவும், ரஷ்யாவும், சிரியாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறதென்றால் அது, முஸ்லீம் நாடுகளில் ஜனநாயகத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, சிரியாவில், இவ்விரு நாடுகளும் பாரிய முதலீடுகளை செய்திருக்கின்றன என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
ஆனால் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் சிரியா மீது ஏற்கனவே தனித்தனி பொருளாதர தடைகளை சுமத்தியிருப்பதும், தமது நலன்களுக்கு வளைந்துகொடுக்க கூடிய ஆட்சி ஒன்றை மற்றைய மத்திய கிழக்காசிய நாடுகளை போன்று சிரியாவிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் தான் எனவும் விமர்சனங்கள் உண்டு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக