காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்துக்காக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை தாக்கியவர்களுக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார்.
இத் தொடர்பாக அவர் தமது கட்சி பத்திரிகையான "சாம்னா"வில் எழுதியிருப்பதாவது:
"சபாஷ்! நாட்டை பிரிக்க வேண்டும்
என்று பேசுபவர்களுக்கு இதுபோன்று பாடம் கற்பிக்கப்பட வேண்டும்.
ஒருவரை சிலர் ஆத்திரமூட்டும்போது அவரால் அமைதியாக இருக்க முடியாது. இதுபோன்று (நாட்டை பிரிக்கவேண்டும்) என்று பேசுபவர் முதலில் குற்றவாளி. அதனால் மக்கள் அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும்."
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
அன்னா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், காஷ்மீர் குறித்து அம்மாநில மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்தவர்கள், பூஷணை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் புகுந்து தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக