தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.11

கறுப்பு மரண பக்டீரியாவின் மரபணு கண்டறிந்து சாதனை


ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 100 முதல் 150 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமான கறுப்பு மரணம் ( Black Death) எனப்படும் தொற்று நோய்க்குக் காரணமான பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்துள்ளனர்.

(யேர்சினியா பெஸ்டிஸ்) Yersinia pestis எனப்படும் பக்டீரியாவின் வகையொன்றே இந்நோய்க்குக் காரணமாக அமைந்ததாகவும் இக்காலத்தில் இது பரிணாமவளர்ச்சியடைந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் சிறிய அளவிலேயே அவ் பக்டீரியாவானது மாற்றமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் தற்கால என்டிபயோட்டிக்ஸ் மூலம் இப் பக்டீரியாவை இலகுவாக அழிக்கமுடியுமென என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். லண்டனில் குறித்த காலப்பகுதியில் இந்நோயால் உயிரிழந்த நபர்களின் புதைக்கப்பட்டிருந்த எலும்புக் கூடுகளின் பற்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ யில் இருந்தே இவ் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கண்டுபிடிப்பானது தொற்று நோய் தொடர்பான ஆராய்ச்சியில் புதிய மைல்கல் என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். ஜேர்மனி, அமெரிக்கா மற்றும் கனேடிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்தே இக்கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளனர். ஆதிகால நுண்ணுயிர் ஒன்றின் டி.என்.ஏ தொடரினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டுபிடித்துள்ளமை இதுவே முதன் முறையாகும்.

0 கருத்துகள்: