தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.11

நிபுணர் குழு அறிக்கை மீது நம்பிக்கை இல்லை-காஷ்மீர் மக்கள்


இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மூன்று உறுப்பினர் தூதுக்குழுவினர் தங்கள் அறிக்கையை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திடம் தாக்கல் செய்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் குழுவின் தலைவரான பத்திரிகையாளர் திலிப் பட்கோங்கர், பிரிவினைவாத தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தால், தங்களது அறிக்கை மேலும் வலுவுடையதாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீர் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே தங்கள் அறிக்கை அமைந்திருப்பதாக அறிக்கையை அளித்தபின் பட்கோங்கர் தெரிவித்தார்.

இந்தக் குழுவின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி ஜம்மு – காஷ்மீர் 
அமைப்புக்கள் குழுவின் அமர்வுகளை புறக்கணித்தனர்.

அனைத்துக் கட்சிக்குழுவிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும் என உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாகவும் திலிப் பட்கோங்கர் தெரிவித்தார்.

இது ஒருபுரம் இருக்க இந்திய இந்திய ஆளுகைக்குட்பட்ட கஷ்மீரில் இருக்கும் அடையாளம் காணப்படாத சவக்குழிகள் தொடர்பான விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாலும் இது அங்குள்ள மக்களிடம் நம்பிக்கையை தோற்றுவிக்கவில்லை என்று தெரிவிக்கிறார்.

ஏறக்குறைய ஆறாயிரம் சடலங்கள் இப்படியான அடையாளம் காணப்படாத சவக்குழிகளில் புதைக்கப்பட்டிருப்பதாக மாநில மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இப்படியான புதைகுழிகள் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டி அமைந்திருக்கின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்ட சடலங்கள் இந்த புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பலர் நம்புவதாக கூறுகிறார். 

0 கருத்துகள்: