தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.11

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா?


சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஐந்து மாதங்கள் கழித்து வருகின்ற 17ஆம் தேதி அன்று உள்ளாட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடக்க இருக்கின்றது.  தற்போது இந்த உள்ளாட்சித் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறுமான் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காதோடு காதாய் வரும் செய்திகளையும், நம் கண் முன்னே நிகழும் சில சம்வங்களை காணும் போது உள்ளாட்சித் தேர்தல் நேர்மையுடன் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே எனத் தோன்றுகிறது.


சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த கட்சிகளே பெரும்பாலும் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றுவதை நாம் பல முறை பார்த்து வருகிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் வெளிவந்தது. ஆண்டுகொண்டிருந்த தி.மு.க அரசு பெரும் தோல்வியை சந்தித்தது. அவர்களால சட்டமன்றத்தில் எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட பெறமுடியாமல் போனது. மறுமுனையில் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து தனித்து பெரும்பான்மை பெற்று அதிமுக அரசு வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

அதிமுகவிற்கு மக்கள் அதிக அளவில் வாக்களித்தார்கள் என்றால் அது அவர்கள் செய்த சாதனைகளுக்காக அல்ல மாறாக திமுக ஆட்சியில் நடந்த ஊழலில் மக்களுக்கு ஏற்பட்ட கோபமே அதிமுகவை வெற்றி பெறவைத்திருக்கிறது. இதை தற்போது ஜெயலலிதா நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.

தற்போது உள்ளாட்சித் தேர்தலில் எல்லா கூட்டணிக்கட்சிகளும் உடைந்து தனித்தனியாக களம் காண்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே சமச்சீர் கல்வியை ரத்து செய்வதாக அறிவித்தது முதல் ராமநாதபுரம் பரமக்குடியில் தலித் சமூகத்திற்கு எதிராக நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் வரை அதிமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நிகழ்வுகள் இவ்வாறு போய்கொண்டிருக்க அதிமுக அரசு தான் எதிர்பார்த்த வெற்றியை வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பெறமுடியாது என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கிறது.

நேர்மையாக தேர்தலை எதிர்கொள்ள அதிமுக ஒன்றும் நீதிமான்களை அடங்கிய கட்சியல்ல, மாறாக வெற்றிபெறுவதற்காக எல்லா கிரிமினல் வேலைகளிலும் ஈடுபடும் அதே சமயம் ஆளுங்கட்சியாக இருப்பதால் காவல்துறையினரின் உதவியை கொண்டே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்புகள் அதிகம் இருக்கிறது.

இதை நாம் வெறும் யூகத்தைமட்டும் அடிப்படையாக கொண்டு கூறவில்லை, மாறாக தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரில் இவர்களுடைய பிரச்சாரங்கள் ஏதும் வீரியமாக நடைபெறுவதில்லை. சுயேட்சையாக போடியிடும் ஒரு கவுன்சிலர் வேட்பாளர் செய்யும் பிரச்சாரத்தை விட மந்தமாகமே செல்கிறது ஆதிமுகவின் பிரச்சாரம்.

இந்த செய்தியை படிப்பவர்கள் இது உண்மைதானா என்பதை அறிய உங்கள் பகுதிகளில் அதிமுக வின் தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கிறது என்பதை கவனியுங்கள். நிச்சயமாக குறுக்குவழியில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் அதிமுக இறங்கியுள்ளது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

நம்முடைய இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக நமது நண்பர் ஒருவர் அதிர்ச்சியான செய்தியை கூறினார். சமீபத்தில் ஒருவரோடு பேருந்தில் பயணிக்கும் போது அருகில் இருந்த ஒருவர் (அதிமுக நிர்வாகியாக இருக்கலாம் என்று நண்பர் கூறுகிறார்) மற்றவரிடம் "அம்மாவின் ஆணை கிடைத்தவுடன், பெரும்பாலான வாக்குச்சாவடிகளை கைப்பற்றி, நமக்கு சாதகமாக்கிக்கொள்வோம், அதனால் தான் நாங்கள் பிரச்சாரத்தில் அதிக ஈடுபாடு செலுத்தவில்லை" என்று கூறினாராம்.

நாம் கருதுகின்ற வகையில் 11:30 மணி முதல் மதியம் வரையிலான நேரம் வரை விட்டு விட்டு பின்னர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதற்கான வேலைகளில் அதிமுகவினர் ஈடுபடுவார்கள் என்றே தோன்றுகிறது. இன்று பெரும்பாலான கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டாலும் சுமூகமாகவும் அசம்வாதி சம்பவங்கள் நிகழாமலும் தேர்தல் நடைபெறும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. தேர்தல் ஆணையம் வழக்கம் போல் தங்களது கெடுபிடிகளை அறிவித்துள்ளது. தேர்தல் அமைதியாக நடந்தால் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வெற்றி பெறுவார்கள். 

0 கருத்துகள்: