தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.10.11

10.000 ராக்கட் ஏவுகணைகள் திருட்டு விபரீதம் ஏற்படலாம் அச்சம்


லிபியாவில் நடைபெறும் போரில் ஈடுபட்டுள்ள போராளிக் குழுக்களுக்கு மேலை நாடுகளினால் வழங்கப்பட்ட ஆயுதங்களில் 10.000 வரையான ராக்கட் ஏவுகணைகள்; போனவழி தெரியாமல் களவாடப்பட்டுவிட்டன. இவை அல் காயிதா போன்ற அமைப்புக்களின் கைகளில் சிக்குப்பட்டால் மேலை நாடுகளுக்கு பாரிய தலைவலியாகிவிடும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இவை 1960 களில்
சோவியத்யூனியனில் செய்யப்பட்ட ராக்கட் ஏவுணைகள் என்றும் அதி நவீனமானவை அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இவை தற்போதும் யுத்த களத்தில் பாவனையில் உள்ள ஆயுதங்களாகும். சுமார் 1.4 மீட்டர் நீளம், 14 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணைகள் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு ஆகாயத்தில் பறக்கும் ஆற்றல் பொருந்தியவை. இந்த ஏவுகணைகளால் யுத்த விமானங்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் சிவில் போக்குவரத்து விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஆயுதங்கள் தப்பான கைகளுக்கு போகவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்யும்படி அமெரிக்கா அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக 35 பேர் கொண்ட விசேட குழு தேடுதல் கருவிகளுடன் லிபியா புறப்படுகிறது.

0 கருத்துகள்: