தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.7.11

தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ லெப்டினன்ட் கர்னல் கைது!

JULAY 10, சென்னை:  சென்னை ராணுவ குடியிருப்பில், சிறுவன் தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கைது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை நடைபெற உள்ள பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட உள்ளோம். 

சிறுவனை சுட்டுக்கொன்றவர் லெப்டினன்ட் கர்னல் ராமராஜன் என்றும், இவர் நாளை பத்திரிகையாளர் சந்திப்பில், சிறுவனை எப்படி கொன்றார் என்று நடித்துக் காட்டுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

சிந்திக்கவும்: பொது மக்கள் மற்றும் ஊடகங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு, மக்கள் நல இயக்கங்கள் நடத்திய போராட்டங்கள் இந்த அரசு பயங்கரவாதி மீது நடவடிக்கை எடுக்க காரணமாக அமைந்தது. அதே நேரம் சில இணையதளங்களும் அதன் வாசகர்களும் இந்த ஏழை சிறுவனை சேரி பையன் என்றும் தடுக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததால் தான் சுடப்பட்டான்என்றும் வக்கலாத்து வாங்கி மனசாட்சியே இல்லாமல் பதிவுகள் போட்டன.

தாங்கள் கொண்ட குருட்டு தேசபக்தியின் விளைவாக இந்திய ராணுவம் ஈழத்தமிழர், கஷ்மீர் மக்கள், மணிப்பூர் மக்கள், காட்டு வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள், இவர்கள் மீது நடத்திய இன அழிப்பு, கற்பழிப்பு, இதை எல்லாம் மறைக்கவும் வக்கலாத்து வாங்கவும் செய்தன. சிறுவனை கொன்ற ராணுவ கோழையை கைது செய்திருப்பது பொது மக்களால் வரவேற்கப்படுகிறது.

சிறுவனை கொன்றவர்க்கு சட்டம் சரியான தண்டனை வழங்குவதன் மூலம் இனிஅதிகாரம் கொடுக்கப்பட்ட காவல்துறை, மற்றும் ராணுவ துறையை சார்ந்தவர்கள் "தங்கள் பொறுப்பு மக்களை பாதுகாப்பதே" அதற்காகத்தான் மக்களின் வரி பணத்தில் இருந்து சம்பளம் வாங்குகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.  நன்றி: சிந்திக்கவும்

0 கருத்துகள்: