தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.7.11

சுனில் ஜோஷி கொலைவழக்கு:என்.ஐ.ஏ நீதிமன்றத்தை அணுகும்

sunil joshi
போபால்:ஆர்.எஸ்.எஸ் ஹிந்துபயங்கரவாத இயக்கத்தை சார்ந்த சுனில் ஜோஷி கொல்லப்பட்ட வழக்கின் விசாரணைப் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கோரி தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மத்திய பிரதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இவ்வழக்கு தேவாஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான்,
அஜ்மீர்தர்கா, மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் பங்குண்டு என கருதப்படும் ஜோஷி 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
ஜோஷியின் கொலைவழக்கு விசாரணையை ம.பி பா.ஜ.க அரசு முதலில் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க மறுத்த போதிலும் பின்னர் ஒப்படைத்தது. வழக்கு தற்பொழுது தேவாஸ் நீதிமன்றத்தில் உள்ளது. இச்சூழலில் என்.ஐ.ஏ நீதிமன்றத்தை அணுகியுள்ளது. வழக்கில் பிரக்யாசிங் தாக்கூர் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது தேவாஸ் போலீஸ் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது.

0 கருத்துகள்: