தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.7.11

தாக்குதலில் காயமடைந்த ஏமன் அதிபர் தொலைக்காட்சியில் உரை

ரியாத், ஜூலை. 8-     குண்டுவீச்சு தாக்குதலில் காயமடைந்த ஏமன் நாட்டின் அதிபர் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தொலைக்காட்சி வாயிலாக தோன்றி உரையாற்றினார்.
ஏமன் அதிபர் அலிஅப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த
ஜூன் மாதம் 3-ம் தேதியன்று அதிபர் மாளிகையில் நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் அலிஅப்துல்லா சலே படுகாயமடைந்தார். பின்னர் நாட்டை வெளியேறினார். சவூதியில் தஞ்சமடைந்த சலே, அங்கு அவருக்கு தீவிச சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் மற்றும் தலைப்பகுதியில் தீக்காயமடைந்திருந்த சலே சிகிச்சைக்குபின் குணமடைந்த பின்னர் நேற்று சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் டி.வி. வாயிலாக சுமார் 10 நிமிடம் பேசினார். அவர் பேசுகையில், அரசியல் சீர்திருத்ததிற்காக நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன். தேர்தல் மூலம் ஜனநாயக உரிமை பெற மக்களுக்கு உரிமை உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுமானால் எதிர்க்கட்சியினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க தயார் என்றார்.

0 கருத்துகள்: