அஹ்மதாபாத்:2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நிகழ்த்திய கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான தொலைபேசி உரையாடல் ஆவணங்கள், இண்டலிஜன்ஸ் லாக் புக்குகளும் அழிக்கப்பட்டுவிட்டதாக நானாவதி கமிஷன் முன்னால் ஆஜரான அரசு வழக்கறிஞர் சரத் வக்கீல் தெரிவித்துள்ளார். மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிடம்
விசாரணை நடத்திய பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார் அவர்.
விசாரணை நடத்திய பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசினார் அவர்.
சட்டப்படி இத்தகைய ஆவணங்கள் குறிப்பிட்ட காலக்கட்டமான 5 ஆண்டுகளுக்கு பிறகு அழிக்கப்பட்டுவிடும் என அவர் தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டைய இண்டலிஜன்ஸ் ஆவணங்கள் 2007-ஆம் ஆண்டு அழிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் கிடைக்காது என தெரிந்துதான் அவற்றை மீண்டும் கேட்கிறார் என வக்கீல் கூறுகிறார். முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை கோரி கடந்த மாதம் சஞ்சீவ் பட் விண்ணப்பம் அளித்திருந்தார். விசாரணையின் போது சஞ்சீவ் பட்டிற்கும், சரத் வக்கீலுக்குமிடையே சூடான வாக்குவாதங்கள் நடந்தன.
சஞ்சீவ் பட் எல்லை மீறியதாக சரத் குற்றம் சாட்டினார். குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார் சஞ்சீவ் பட். இதனைத் தொடர்ந்து நானாவதி கமிஷன் பட்டிடம் விசாரணை நடத்தியது. கேள்விகளுக்கு உரிய பதிலை பட் அளிக்கவில்லை என சரத் வக்கீல் கமிஷனிடம் புகார் அளித்தார். ஆனால் எந்த ரீதியில் பதிலளிக்க வேண்டும் என்பது சஞ்சீவ் பட்டின் உரிமை என கமிஷன் பதிலளித்தது.
சஞ்சீவ் பட்டிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை நானாவதி கமிஷன் நிராகரித்திருந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்த ஹிந்துக்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என இனப்படுகொலை நடந்த காலக்கட்டத்தில் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக