வாஷிங்டன்:பழுதூக்கும் போட்டியில் இஸ்லாமிய ஆடையுடன் கலந்து கொள்ள அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ, 53 கிலோ பிரிவுகளில் சிறந்து விளங்கிய குல்ஸும் அப்துல்லாஹ்வுக்கு அடுத்து வரவருக்கும் தேசிய போட்டிகளில் பங்கேற்க அமெரிக்க வைட்லிஃப்டிக் அசோசியேசன் தடை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பளுதூக்குதல் ஃபெடரேசனின் சட்டத்தின்படி கைமுட்டு, கால்முட்டு ஆகியவற்றை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அசோசியேசன் குல்ஸுமிற்கு அளித்த விளக்கமாகும். போட்டிகளில் பளுவை தூக்கியதை பூர்த்தி செய்ததை உறுதி செய்ய நடுவர்களுக்கு இவ்வுறுப்புகளை காணவேண்டுமாம். போட்டியில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டது நிராசையை ஏற்படுத்துவதாக கம்ப்யூட்டர் எஞ்சீனியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்ற குல்ஸும் கூறியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக