தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.12

ஈராக்கில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுவெடிப்பு 42 பேர் பலி - 130 பேர் படுகாயம்


ஈராக்கில் ஷியா முஸ்லிம் யாத்திரீகர்களைக் குறி வைத்து நேற்று  அடுத்தடுத்து பல இடங்களில் இட ம்பெற்ற குண்டுவெடிப்பில் மொத்தம் 42 பேர் கொல் லப் பட்டும் 133 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். முதாலாவது தாக்குதல் பக்தாத்தில் இருந்து தெற்கே 100 Km தொலைவில் ஹில்லா நகரில் அமைந்துள்ள உணவு விடுதியில் யாத்திரீகர்களுக்கு உணவு பரி மாறிக் கொண்டிருக்கும் போது
அருகே வந்து மோதி கார் ஒன்று வெடித்ததில் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்து ஏற்பட்ட தாக்குதலும் சில நிமிடங்கள் கழித்து பொது மக்களும் பாதுகாப்புப் படையினரும் குவிந்த போது அதே இடத்தில் இன்னொரு கார் வெடிக்கச் செய்யப்பட்டது. இவ்விரு தாக்குதல்களிலும் 26 பொதுமக்கள் உடல் சிதறி கொல்லப் பட்டதுடன் 80 பேர் படுகாயமடைந்தனர்.

மற்றுமொரு தாக்குதல், பக்தாத்தில் இருந்து தெற்கே 110 Km தொலைவில் ஷியா முஸ்லிம்களின் புனித நகரமான கர்பாலாவின் கிழக்கு நுழைவாயிலின் அருகே கார்க்குண்டு வெடித்ததில் நிகழ்ந்தது. இதில் அங்கிருந்த யாத்திரீகர்களில் 8 பேர் கொல்லப் பட்டும் 22 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். இதைத் தவிர ஈராக்கின் இன்னும் மூன்று இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கல் இடம்பெற்றதிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். 

இத்தாக்குதல்கள் மூலம் அங்குள்ள ஆயுததாரிகள் அரசின் பாதுகாப்புப் பிரகடனத்தைக் கேள்விக்குரியதாக்கியுள்ளதுடன் அவர்களால் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்களை எதிர்காலத்திலும் நிகழ்த்தி அப்பாவிப் பொது மக்களின் உயிரைப் பலி வாங்க முடியும் என்ற அச்சத்தையும் பொது மக்களிடையே தோற்றுவித்துள்ளது.

0 கருத்துகள்: