தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.12

குஜராத் தேர்தலில், மோடியை எதிர்த்து போட்டியிடுகிறார் ஸ்வேதா பட்


குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், ஆம தாபாத்தின் மணிநகர் தொகுதியில் குஜராத் முதல்வ ர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார்.இங்கு இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில், சஞ்சீவ் பட் எனும் ஐபி எஸ் அதிகாரியின் மனைவியார் ஸ்வேதா பட் போட் டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பிலான காவல்துறை ஆவ ணங்கள் நரேந்திர மோடி
ஆட்சி காலத்தில் மாயமாகிவிட்டன என நானாவதி கமிஷனிடம் சஞ்சீவ் பட் வாக்குமூலம் அளித்ததை அடுத்து மோடி அரசால் ப தவி நீக்கம் செய்யப்பட்டவர் சஞ்சீவ் பட்.

கலரவத்தின் போது ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளை பற்றியும் இவர் கடும் விமர்சனம் முன்வைத்திருந்தார். இதையடுத்து போலீஸ் பயிற்சி கல்லூரியின் முதல்வராக இருந்த அவர், பதவீநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது கொலை குற்றச்சாட்டு ஒன்றில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் அவரது மனைவி ஸ்வேதா பட்டை தற்போது தேர்தலில் நிறுத்தியுள்ளது காங்கிரஸ். மாநிலத்தில் ஜனநாயகத்திலிருந்து நாம் வெகு தூரத்தில் நிற்கிறோம். அதை மீண்டும் நிலைநாட்டுவது அவசியமாகிறது. அதற்காக ஒவ்வொருவரும் தம்மால் என்ன முடியுமோ அதை செய்ய வேண்டும் என ஸ்வேதா பட் கூறியுள்ளார்.

மணிநகர் தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்க்கப்போகும் வேட்பாளர் யார் என இதுநாள் வரை அறிவிக்கப்படாமல் இருந்ததால் எதிர்பார்ப்பு நீடித்திருந்தது. குஜராத் சட்டசபையின் 2ம் கட்ட தேர்தல் டிச.17ம் திகதி நடைபெறுகிறது.

இதேவேளை இன்று மணிநகரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கல்ந்துகொண்ட நரேந்திர மோடி, குஜராத்தின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் ஒன்றுமே செய்யவில்லை. குஜராத் மக்கள் எவரும் காங்கிரஸை சார்ந்திருக்கவில்லை என்றார்.
நன்றி: 4தமிழ்மீடியா

0 கருத்துகள்: