தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.9.12

இந்தியாவின் வெண்மைப்புரட்சி தந்தை வர்கீஸ் குரியன் இன்று காலமானர்


இந்தியாவின் வெண்மை புரட்சியின் தந்தை என வர் ணிக்கப்படும் வர்கீஸ் குரியன் இன்று குஜராத்தில் மர ணமடைந்தார்.இறக்கும் போது அவருக்கு வயது 90. 28 வது வயதில் குஜராத் மாநிலம் ஆனந்த்தில் உள்ள பால் பண்ணைக்கு வந்தார். 1949ம் ஆண்டு அவர் தன க்கு கிடைத்த அரசு வேலையை விட்டுவிட்டு கூட்டுற வு பால் பண்ணையை அமைத்தார். உலகின் பிரபல பால் உற்பத்தி நிறுவனமாக தற்போது திகழும் அமுல் நிறுவனத்தை ஸ்தாபித்தார்.
200க்கு மேற்பட்ட கூட்டுறவு பால் சந்தைகள் உரு வாகின. நாட்டில் பால் உற்பத்தி கோடிக்கணக்கில் பெருகியது. 10 மில்லியன் (1 கோடி) கால்நடை விவசாயிகளை ஒருங்கிணைத்தார். இந்தியாவின் பால் உற்பத்தி துறையில் பற்றாக்குறையை போக்கி வளமையை ஏற்படுத்தினார்.

கடந்த நவம்பர் மாதம் 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவரது மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக குஜராத் மாநிலம் நாண்டியாட் எனும் இடத்தில் மனைவி மகளுடன் அவர் வசித்துவந்தார்.

இந்தியாவின் பால் மனிதர் என்று வர்ணிக்கப்படுகின்ற போதும், அவர் தனது உணவு பாவணையில் பால் உபயோகிப்பதில்லை. 'எனக்கு பால் விருப்பமும் இல்லை. அதனால் நான் பால் குடிப்பதும் இல்லை' என அவர் ஒரு முறை செவ்வி ஒன்றில் தெரிவித்திருப்பார்.

0 கருத்துகள்: