தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.9.12

சீக்கியர்களின் பாதுகாப்புக்கு 2 புதிய சட்டங்கள். கலிபோர்னியா அரசு நடவடிக்கை.


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சீக்கியர்களின் பாதுகாப்புக்கு 2 புது சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அமெரிக்காவின் விஸ்கான்சிஸ் ஓக் கிரீக் பகுதியில் உள்ள குருத்வாராவில் கடந்த மாதம் முன்னாள் ராணுவ வீரர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.சீக்கியர்களின் நிறுவனங்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் கலிபோர்னியாவில் வசிக்கும் சீக்கியர்களின் பாதுகாப்பு 2 புது சட்டங்கள்

கொண்டு வரப்பட உள்ளன. இதற்கான சட்ட திருத்தத்தில் கவர்னர் எட்மண்ட் பிரவுன் கையெழுத்திட உள்ளார். உயர்நிலை பள்ளிகளில் சீக்கிய மதம் குறித்த பாடத்தை சேர்க்க ஒரு சட்டம் வழிவகுக்கும்.
இதன்படி கலிபோர்னியாவில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும் சீக்கிய மதத்தின் வரலாறு, பாரம்பரியம், கொள்கை போன்றவற்றை படிக்க வேண்டும். கலிபோர்னியாவில் சீக்கியர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுவசதி ஏற்படுத்தி தரும் வகையில் மற்றொரு சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த 2 சட்டங்கள் மூலம், கலிபோர்னியாவில் வசிக்கும் மற்றவர்களுக்கு கிடைக்கும் சமூக நீதி சீக்கியர்களுக்கு கிடைக்கும். கவர்னரின் நடவடிக்கைக்கு வடஅமெரிக்க பஞ்சாபி சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: