தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.9.12

நீல் ஆம்ஸ்ரோங் இரண்டு வாரங்களில் கடலின் அடியில் அடக்கம்


கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மரணமடை ந்த நீல் ஆம்ஸ்ரோங்கின் 82 வயதான உடல் சுமார் இரண்டு வாரங்களில் கடலின் அடியில் புதைக்கப்ப ட இருக்கிறது.அவருடைய இறுதிக் கிரியைகள் குடு ம்ப அங்கத்தவரிடையே நடைபெற்றபோது இது அறி விக்கப்பட்டது.ஆம்ஸ்ரோங் தனது இறுதிக்கிரியைக ள் அமைதியாக நடைபெற வேண்டுமெனக் கேட்ட தால் சென்ற வாரம் குடும்ப அங்கத்தவருடன் அமை தியான கிரியை நடைபெற்றதாக டென்மார்க் தொ லைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.எதிர்வரும் 13 ம் திகதி இவருக்கான
பொதுவானஇறுதி மரியாதை நடைபெறவுள்ளது, அத் தருணம் இவருடைய உடலம் புதைக்கப்படும் திகதி அறிவிக்கப்படும்.
அமெரிக்காவில் அதி உயர் மரியாதைக்குரியவர்கள் கடலின் அடியில் அடக்கம் செய்யப்படுவது வழமை.
ஆனால் அமெரிக்கப்படைகள் பின்லேடனின் உடலையும் கடலின் அடியில் புதைத்ததாக செய்திகள் கூறியிருந்தன.
ஆம்ஸ்ரோங்கின் உடலத்தை மயானத்தில் புதைப்பது கூட ஆபத்தானது, அதைப் பரிசோதனைக்காக யாராவது எடுத்துவிடலாம் என்ற அச்சம் இருப்பதை மறுக்க முடியாது.
ஆம்ஸ்ரோங் கடலின் அடியில் புதைந்துவிட்டாலும் அவருடைய சரித்திரம் புதையாது.

0 கருத்துகள்: