தற்போது டேனிஸ் பிரதமர் கெல தொனிங் சிமித்து ம், அவருடைய வர்த்தகக் குழுவினரும் நான்கு நாட் கள் விஜயமாக சீனா சென்றுள்ளார்கள்.சீனாவில் உள்ள டேனிஸ் வர்த்தக நிலையங்களை கெல தொ னிங் பார்வையிடுவார், அத்தோடு சீனாவுக்கான டே னிஸ் ஏற்றுமதிகளை அதிகரிக்கும் பேச்சுக்களையும் நடாத்துவார்.இந்தப் பேச்சுக்களின்போது சீனாவின் வர்த்தகத்தை கைக்கு கொண்டுவர பிரான்ஸ், ஜேர் மனி, சுவீடன் போன்ற நாடுகளின் போட்டி பெரும் போட்டியாக இருக்கிறது.தரத்தைக் கூட்டி, விலை யை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
இருப்பதை மறுக்க முடியாதுள்ளது, அதே வேளை இன்றைய நிலையில் சீனாவின் வர்த்தகத்தை இழக்க முடியாத நிலையும் இருக்கிறது.
மறுபுறம் சீன அரசியலில் பனிப்போர் நடக்கிறதோ என்ற அச்சத்தை சீன உதவிப் பிரதமர் ஜி ஜின்பிங்கின் நடத்தைகள் ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டனை இவர் சந்திக்க மறுத்தார், இப்போது தனது நாட்டுக்கு வந்த இன்னொரு நாட்டு பிரதமரையும் சந்திக்க மறுத்து, சந்திப்பை தள்ளுபடி செய்துள்ளார்.
சீனா அதிபர் கூ ஜிந்தாவே தற்போதைய நிலையில் நாட்டின் உயர் அதிகாரப் பிரதிநிதியாகும், அவர் இருக்க இவர் ஆடும் நாடகம் தலையிருக்க வால் ஆடுவதைப் போல இருக்கிறது.
கடும் கம்யூனிச முறுக்கேறி மேலை நாட்டு தலைவர்களை சந்திக்க முடியாதென்று இவர் கூறிவருகிறார்.
இராணுவத்தில் இவருக்குள்ள செல்வாக்கு என்ன, அதிபருக்கு முரணாக இவர் காட்டும் அதிருப்தியின் பொருளென்ன.. சிறிது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
சீனாவின் உயர் மட்டத்திற்குள் ஏதோ சர்ச்சை வெடித்துள்ளதாக மேலைத்தேய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக