தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.9.12

அரேபிய வலய அல்-கைதா இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவர் பலி : யேமன் அறிவிப்பு


யேமனின் அதிரடிப் படையினரின் திடீர் தாக்குதல் ஒன்றின் மூலம்,  அரேபியத் தீபகற்பத்திற்கு பொறு ப்பான அல்-கைதாவின் இரண்டாம் நிலை தலைவர் என கூறப்படும் 'சயித் அல் ஷிஹ்ரி என்பவர் கொல் லப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 6 தீவிரவாதிகளு ம் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இத்தக வலை யேமன் இராணுவத்தின் உத்தியோகபூர்வ இ ணையத்தளம் உறுதி செய்துள்ளது.
அல்கொய்தாவி ன் இரண்டாம் நிலை இராணுவ உயர் அதிகாரியாக இவர் இருந்துவந்துள்ளதாகவும்,  கொல்லப் பட்ட சடலங்களில் DNA பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உண்மையில் இறந்தது இவர் தான் என பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அல் ஷிஹ்ரி இதற்கு முன்பு ஒரு தடவை கியூபாவில் உள்ள அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான கௌந்தனாமோ சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். பின்னர் 2007 இல் சவுதி அரச கட்டுப்பாட்டில் விடப்பட்டார். அங்கு இவருக்கு மக்கள் தீவிரவாதிகளுடன் சேராமல் தடுக்கும் ஒரு செயற் திட்டத்தில் கூட ஈடுபடுத்தப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் சுதந்திரமாக ஏனைய நாடுகளுக்குப் பயணிக்கும் தடையை சவுதி அரசு இவருக்கு விதித்தமையால் இவர் அங்கிருந்து யேமெனுக்கு குடி பெயர்ந்ததுடன் அங்கு இன்னொரு கௌந்தனாமோ கைதியுடன் இணைந்து AQAP (அல் கொய்தாவின் அரேபிய வலய அமைப்பு) இன் தலைவரானார்.

இதனை 2009 இல் அமெரிக்க அரசு உறுதி செய்ததுடன்  அன்றிலிருந்து இவர் தேடப்பட்டு வரும் முக்கிய புள்ளியானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ஒரு தடவை யேமேனின் படைகள் மேற்கொண்டிருந்த தாக்குதலில் தப்பித்துள்ளார். 

0 கருத்துகள்: