பிரிட்டன் விமானப்படையில் உலங்குவானூர்தி தா க்குதல் பிரிவில் பயிற்சி எடுத்துவரும் பிரிட்டன் இ ளவரசர் ஹர்ரி மறுபடியும் பயிற்சிக்காக ஆப்கான் வந்தால் கொல்லத் தயங்கமாட்டோம் என்று தாலி பான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.நான்கு ஆண்டு காலம் விமானப்படையில் கண்டிப்பாக பயிற்சி எடு க்க வேண்டிய நிலையில் உள்ள இளவரசருக்கு ஆப் கானில் கடும் ஆபத்து இருக்கும் காரணத்தால் ஏற் கெனவே அவருடைய ஆப்கான் பயிற்சிக்
காலம் குறுக்கப்பட்டிருந்தது, இப்போது மறுபடியும் ஆப்கான் சென்று தனது பயிற்சி யை முடிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
காலம் குறுக்கப்பட்டிருந்தது, இப்போது மறுபடியும் ஆப்கான் சென்று தனது பயிற்சி யை முடிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
ஆனால் இளவரசர் ஹர்ரி மட்டும் ஆப்கன் கெல்மன்ட் பகுதிக்கு வந்து பிரிட்டன் படைகளுடன் சேர்ந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால் தலபான்களின் முழுக்கவனமும் அவர்கள் பக்கம் திரும்பும் என்றும் தலபான்களின் பேச்சாளர் ஸபிகுல்லா முஜாகிட் தொலைபேசி மூலம் ஏ.எப்.பி செய்தித் தாபனத்திற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது இளவரசர் ஹர்ரியை அதி விசேடமாக தாம் குறிவைப்போம், அது பிரிட்டன் படைகளுக்கும் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த இக்கட்டான சவாலை பிரிட்டன் படைகள் எவ்வாறு கையாளப்போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இது இவ்விதமிருக்க பாகிஸ்தானில் கடந்த மூன்று தினங்களாக ஏற்பட்டுள்ள கடும் மொன்சூன் மழை காரணமாக இதுவரை 79 பேர் மரணித்துள்ளனர், மேலும் பலர் இறந்துள்ளனர் விபரம் கிடைக்கவில்லை.
மேலும் நதிகள் மழை வெள்ளத்தால் கட்டு மீறி பாய்வதால் 1600 வீடுகள் பாதிப்படைந்து, 5000 பேர் காயமடைந்துள்ளார்கள்.
கடந்த மாதம் வெள்ளப் பெருக்குக் காரணமாக 26 பேர் இறந்தது தெரிந்ததே.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக