தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.12

உமரின் பாதையை முர்ஸி பின்தொடர வேண்டும் – அல் அஸ்ஹர் இமாம்!


கெய்ரோ:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பாதையை எகிப்தின் புதிய அதிபர் முஹம்மது முர்ஸி பின்பற்ற வேண்டும் என்று அவ்காஃப் (மார்க்க விவகாரம்) அமைச்சரும், அல் அஸ்ஹர் கத்தீபுமான(இமாம்) முஹம்மது அப்துல் ஃபதீல் கூறியுள்ளார்.வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் இதனை அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியது: “அல்லாஹ்வின் தீர்ப்பின்
அடிப்படையில் முடிவு எடுப்பதில் யாருக்கும் உமர் அஞ்சியதில்லை. நீதிதான் அவரது அளவுகோல். தனது கவர்னர், தனது மகனுக்கு ஆதரவான முடிவை எடுத்தபொழுது கவர்னரான அம்ருப்னு ஆஸை தண்டிக்கவும் தைரியம் காட்டினார்.
இதர மதத்தினருடன் உமர்(ரலி) அவர்களின் அணுகுமுறை முன்மாதிரியானது. பைதுல் முக்கதிஸிற்கு சென்றபொழுது அங்குள்ள கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களது அச்சத்தைப் போக்கினார்கள். தவறான புரிந்துணர்வு ஏற்பட்டுவிடும் என்பதற்காக தொழுகை நேரம் வந்தவுடன் தொழுவதற்கு கிறிஸ்தவர்கள் கோரிய பிறகு அதனை உமர்(ரலி) மறுத்துவிட்டார்கள்.
நமது நாட்டில் பல்வேறு மதத்தவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் நீதியின் அடிப்படையிலான அணுகுமுறையை கையாள நமது புதிய ஆட்சியாளருக்கு சாதிக்க வேண்டும்.” இவ்வாறு அல் அஸ்ஹர் இமாம் தனது உரையில் குறிப்பிட்டார்.
News@thoothu

0 கருத்துகள்: