தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.12

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான்களை ஆப்கனுக்கு அனுப்ப அமெரிக்கா பரிசீலனை

குவாண்டனாமோ சிறையில் உள்ள தலிபான் இயக்கத்தி னரை அவர்களின் சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைக்கு அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்துள் ளதாகத் தெரிகிறது.ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களு டன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கான முன் முயற்சியா க ஒபாமா நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுக்க இருக்கிற து. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாண்டனா மோ சிறை கியூபாவில் உள்ளது. அதிபர் புஷ் ஆட்சி கால த்தில் இராக், ஆப்கானிஸ்தானில் பிடிபட்டவர்கள் முத ல்முறையாக அங்கு சிறை வைக்கப்பட்டனர். அதனை விரைவில் மூடிவிடுவோம் என்று ஒபாமா அறிவித்துள் ளார்.முன்னதாக2000
-ம்ஆண்டில் அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானில் நுழைந்தபோது ஏராளமான தலிபான் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குவாண்டனாமா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

 ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படை 2014-ம் ஆண்டில் முழுமையாகத் திரும்பப் பெறப்படுமென அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

 எனவே அதற்கு முன் ஆப்கானிஸ்தானில் முழுமையாக அமைதியை நிலைநாட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்போது அங்கு அமெரிக்காவின் ஆதரவுடன் ஹமீத் கர்சாய் அதிபராக உள்ளார். எனினும் தலிபான்கள் அவ்வப்போது தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றனர்.

 எனவே அவர்களுடன் ஆப்கன் அரசு மூலம் மீண்டும் அமைதிப் பேச்சு நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் அரசு எந்தவிதமான சுமுக முடிவுக்கும் வரவில்லை. ஏனெனில் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தனது பிடியில் தொடர்ந்து வைத்துள்ளது என்று தலிபான்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 அதே நேரத்தில் குவாண்டனாமோ சிறையில் இருந்து தலிபான்கள் அனுப்பப்படுவது குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியோன் பனேட்டா, "இது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை. அப்படி யாராவது ஆப்கானிஸ்தானுக்கு மாற்றப்பட்டால், அவர்கள் மீண்டும் எந்த சூழ்நிலையிலும் ஆயுதம் ஏந்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற உறுதியின் பேரில்தான் அங்கு அனுப்பப்படுவார்கள்' என்றார் அவர்.

 ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படை வெளியேறிய பின்னர், அந்நாட்டின் சிறையில் உள்ள தலிபான்கள் விடுவிக்கப்படலாம் என்று அமெரிக்கா கருதுகிறது.

0 கருத்துகள்: