தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.7.12

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கடற்படைப் பயிற்சியில் 22 நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் பயிற்சி.

அமெரிக்காவின், ஹவாய் தீவில் உள்ள "பேர்ல் ஹார்பரி ல்' வெள்ளிக்கிழமை கடற்படை பயிற்சி தொடங்கியது. இது ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.அமெரிக்க கடற்படை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற ப யிற்சியை நடத்தி வருகிறது. உலகின் மிகப் பெரிய கடற் படை பயிற்சியான இதில், 22 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயி ரம் மாலுமிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொ ள்கின்றனர். கடந்த 2010-ல் நடைபெற்ற பயிற்சியில் 14 நா டுகள் பங்கேற்றன. ரஷியா, ஜப்பான் ஆகிய வல்லரசு மு தல், சிலி, டோங்கா உள்ளிட்ட சிறிய நாடுகளைச் சேர்ந்த 42 போர்க்கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 200 போர் விமானங்கள் பங்கேற்கின்றன.வெடிகுண்டுகளை
செயலிழக்கச் செய்தல், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் பொதும
க்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக பசிபிக் போர்க்கப்பல் கமாண்டர் செசில் ஹானே தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒத்த கருத்து உடைய நாடுகள் கூட்டாக செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்: