தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.7.12

உள்ளே விட மறுத்ததால் சுட்டுக் கொலை இருவர் பலி!


ஞாயிறு அதிகாலை 03h00 மணியளவில் Lille இலுள்ள Theatro எனப்படும் நடனக் கேளிக்கை விடுதியிலிருந்து (Discotheque) ஒரு நபர் காவலாளர்களால் வெளியேற்றப்பட்டார். கோபத்துடன் வெளியேறிய நபர் தனது வாகனத்திலிருந்து ஒரு AK47 ஐ எடுத்து வந்து சரமாரியாக நடனக் கேளிக்கை விடுதியை...நோக்கிச் சுட்டுத் தள்ளியுள்ளார். இதில்
நடனக் கேளிக்கை விடுதியிலிருந்து வெளியேறிய 25 வயது இளைஞனும் நடனக் கேளிக்கை விடுதியில் வேலை பார்க்கும் பெண் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். சாட்சியங்களின் படி கொலைகாரனும் அவரோடு கூட ஒரு நண்பரும் நடனக் கேளிக்கை விடுதிக்கு வந்திருந்தனர்.




இவர்களின் நடவடிக்கைகள் பிழையாக இருந்ததால் காவலாளர்களால் வெளியேற்றப்பட்டனர். கோபத்துடன் வெளியேறியவர்கள் தமது மகிழுந்தின் பின் பக்கப் பெட்டியைத் திறந்து அதனுள் இருந்த AK47 ஆல் சரமாரியாகச் சுட்டுத் தள்ளி விட்டு தமது மகிழுந்தில் தப்பியோடி விட்டனர் எனத் தெரிய வருகின்றது.


சாட்சியங்களின் படி கொரைலகாரன் ஏற்கனவே காவற்துறையினரால் பல குற்றங்களுக்காகத் தேடப்படுபவர் எனத் தெரிய வந்துள்ளது. இவரும் இவருடைய நண்பரும் பெல்ஜியத்தை நோக்கித் தப்பிச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.


இவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ள காவற்துதுறையினர் பலத்த தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர் Lille காவற்துறையினரின் சகல துறைகளிலிருக்கும் உத்தியோகத்தர்களும் களத்திலிறக்கி விடப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்: