தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.12.11

ஒ.பி.சி உள் ஒதுக்கீடு: சிறுபான்மை மக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே


புதுடெல்லி:மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் தற்போதையை 27 சதவீத ஒ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்டோர்) இட ஒதுக்கீட்டில் அளிக்கப்பட்டுள்ள 4.5 சதவீத உள் ஒதுக்கீடு சிறுபான்மைமக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு
கூறியுள்ளது.
முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், பார்ஸி, புத்த மதத்தினர் ஆகிய சிறுபான்மை வகுப்பினரில் பிற்படுத்தப்பட்ட தன்மையை அடிப்படையாக கொண்டு மட்டுமே ஒ.பி.சி பட்டியலில் உட்படுத்துவோம் என சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மக்களவையில் தெரிவித்தார்.
சிறுபான்மை மக்களுக்கு ஒ.பி.சி இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீட்டை அளித்ததற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சல்மான் குர்ஷித் இதுத்தொடர்பாக விளக்கம் அளித்தார்.ஒ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை வெட்டி குறைப்பதாக குற்றம் சாட்டி பா.ஜ.க உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். சிறுபான்மை வகுப்பினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியல் சட்ட ரீதியான தடை இல்லை என குர்ஷித் அறிவித்தார்.
சட்டரீதியான உரிமைகளில் நின்று கொண்டு அரசு ஒ.பி.சி வகுப்பினர்களுக்கு இடையே உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சல்மான் சுட்டிக்காட்டினார்.
News@thoothu

0 கருத்துகள்: