1884 நவம்பர் 17ம் திகதி பதியப்பட்ட கிரகம் பெல்லின் குரல்.. ஸ்கொட்லான்டில் 1847 மார்ச் 3ம் திகதி பிறந்த உலகப் பகழ்பெற்ற விஞ்ஞானி அலக்சாண்டர் கிரகம் பெல் 1876ம் ஆண்டு மாசி மாதம் 14ம் திகதி தொலை பேசியை கண்டு பிடித்தார். இவர் 125 வருடங்களுக்கு முன்னர் பரிசோதனைக்காக பதிவு செய்த ஒலிப்பதிவு அமெரிக்காவில் பத்திரமாக பேணப்பட்டு வந்தது. இப் போது அந்த ஒலி டிஜிற்றல் செய்யப்பட்டுள்ளது. ஒலி துல்லியமாக
இல்லாவிட்டாலும் கிடைத்தற்கரிய அரிய பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க தேசிய நூலகத்தினால் இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. 1877 ல் வெளிவந்த தோமஸ் எடிசன் போனோகிராபில் இந்த ஒலி பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பழைய ஒரு தட்டில் இருந்து எடுக்கப்பட்டதால் ஒலியில் பாரிய வேறுபாடுகளை காண முடியவில்லை. ஆனால் கிரகாம் பெல்லின் குரலைக் கேட்கும் வரம் உலக மாந்தருக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அருங்காட்சியகத்தில் 1878 – 1898 வரை செய்யப்பட்ட பல ஒலிப்பதிவுகள் உள்ளன. இவை படிப்படியாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 1884 நவம்பர் 17ம் திகதி பதியப்பட்ட கிரகம் பெல்லின் குரல் இதோ தரப்படுகிறது :

0 கருத்துகள்:
கருத்துரையிடுக