இந்திய வரலாற்றில் ‘ஐந்தாம் படை’ கூட்டத்தினர் சிலரால் பொ ய்யான குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டு, புகழுக்கு களங்கம் கற்பி த்து, உண்மைக்கு மாறாக வரலாற்றை திரித்து இழிவுபடுத்தி எ ழுதப்பட்ட மாமன்னர்களில் ஔரங்கசிப்புக்கு அடுத்ததாக மைசூ ர் வீரப்புலி மாவீரன் திப்பு சுல்தானாக தான் இருப்பார். அவரின் உண்மையான வரலாற்றையும், அவரின் ஆட்சிமுறை பற்றிய குறிப்புகளையும் அறிந்துக்கொண்டால், அவர் மீதான ஈர்ப்பு அ திகரிப்பதோடு, மேல்கூறப்பட்ட ‘ஐந்தாம் படை’
வரலாற்றாசிரி யர்கள் மீது அளவில்லா வெறுப்பு உண்டாகிறது.
மதநல்லிணக்கமும், எளிய ஆட்சியையும் நடத்திய ஔரங்கசிப்பை மதவெறியர் என்றே வரலாற்றில் பதித்திட்ட கயவர்கள், சாதிய கொடுமைகளிலிருந்து தாழ்த்தப்பட்டோரை காத்திட்ட, மூடநம்பிக்கைகளை ஒழித்திட துடித்த, ஏழை எளியோரை வட்டிக்கொடுமையிலிருந்து காத்திட பாடுபட்ட மாமன்னர் திப்பு சுல்தானின் வரலாற்றை திரித்திட, அவர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்திட துடியாய் துடிக்கிறது காவாளிக்கூட்டமொன்று. வரலாற்று பக்கங்களை புரட்டுகையில், ‘குள்ளநரி’ ஆங்கிலேயர்களின் தொடைகளை நடுங்கசெய்திட்ட வீரப்புலியாக திப்பு திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், மதநல்லிணக்கம் பேணிய ஒரு சிறந்த அரசனாக, அனைத்து தரப்பு மக்களும் போற்றிய மாமன்னனாக திகழ்ந்தது பளிச்சிடுகிறது.
மராட்டிய இந்து படையினரால் சிருங்கேரி மடத்திலிருந்து தங்கத்தாலான சாரதா தேவி சிலை களவாடப்பட்ட போது, அம்மடத்திற்கு பெருமளவிலான உதவிகளை செய்து, சிருங்கேரி மடத்தை செயல்பட வைத்தவர் திப்பு!
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க, தனது நிலப்பரப்பை விரிவுப்படுத்திட மலபார் மீது போர்தொடுத்த போது குருவாயூர் அவர்தம் ஆளுகைக்கு கீழ்வந்தது. திப்புவிற்கு அஞ்சி அங்குள்ள கிருஷ்ணன் கோயிலை தாமாக மூடினர் அதன் நிர்வாகிகள். இதனை அறிந்த திப்பு, தாம் ஆங்கிலேயர்களுக்கு தான் எதிரியே தவிர, எந்த மதத்திற்குமல்ல என்று கூறி கோயிலை மீண்டும் திறந்திட உத்தரவிட்டது மட்டுமல்லாமல், குருவாயூர் வட்டத்தின் வரிவசூல் முழுவதையும் அக்கோயிலுக்கே வழங்கினார்.
மைசூரை அடுத்து மேலக்கோட்டையில், பிராமணர்களின் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட உள்மத மோதலால், கோயில் சடங்குகளில் பிரச்சனை உருவானது. இதையறிந்த மாமன்னன் திப்பு, இரு பிரிவினரிடையே சமாதானம் ஏற்படுத்தியதோடு அல்லாமல், இரு தரப்பினரும் ஏற்கும் வகையில் கோயில் சடங்குகளை நடத்திட உத்தரவிட்டார்.
திப்பு அரசின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள அவரது அரண்மனைக்கு அருகிலேயே, முந்தைய விஜயநகர பேரரசு ஆட்சியால் கட்டப்பட்ட கோயிலுக்கு பாதுகாப்பை வழங்கி, வழிபாடுகள் நடத்திட செய்ததோடு, ஏராளமான உதவிகளை செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இன்றும் அந்த கோயில் நிர்வாகத்தினரால் பேணி பாதுக்காக்கப்படுகிறது.
ஆங்கிலேயர்களை முழுமூச்சாய் எதிர்த்த திப்பு, கிருத்துவ தேவாலயங்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். ஓரிறை கொள்கையில் அசைக்கமுடியா நம்பிக்கை நம்பிக்கை கொண்டிருந்த திப்பு, பிறமதத்தவர்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட்டதேயில்லை என்பதையும், பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டின் சிறந்த ஆட்சியாளராக நீதியுடன் செயல்பட்டதையும் அவரின் உண்மையான வரலாற்று பக்கங்கள் பறைசாற்றுகின்றன.
திப்பு அரசின் பிரதம மந்திரி பூர்ணைய்யா என்ற பிராமணர்! அவரது படைத்தளபதி கிருஷ்ணாராவ் என்ற பிராமணர் என்பதை வரலாறு உணர்த்துகிறது! கடந்த ஆண்டு (2010) கர்நாடக அரசின் தொல்லியல்துறை வெளியிட்ட திப்புவின் வரலாற்றை விளக்கும் புத்தகம் ஒன்றில், குறைந்தது 153 இந்து கோயில்களை தனது நேரடி அரசின் மூலம் பராமரித்து வந்தார் திப்பு சுல்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது சொல்லுங்கள் மைசூர் வீரப்புலி திப்பு சுல்தான் இந்துக்களின் எதிரியா? மதவெறியரா?
நம் நாட்டு தலைவர்கள் மட்டுமல்லாமல், எதிரிகள் கூட அவரை போற்றினர், மதித்தனர் என்பதை ஆதாரங்களுடன் அடுத்த தொடரில் அறிவோம்…

0 கருத்துகள்:
கருத்துரையிடுக