தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.11

மும்பை விமான நிலையத்தில் விமானம் மீது பஸ் மோதியது

மும்பை விமான நிலையத்தில், மும்பையில் இருந்து டெல்லி செல்லும் ஏ-320 ரக விமானம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. புறப்படுவதற்கு நீண்ட நேரம் இருந்ததால், விமான நிலையத்தில் உள்ளமைந்த பகுதியில் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.அதேபோல, விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களில் ஒன்று, அதே பகுதியில் உள்ள சுத்தப்படுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்த பஸ் திடீரென தானாகவே முன்னோக்கி நகர தொடங்கியது. இதைக்கண்ட ஊழியர்கள் பஸ்சை நிறுத்துவதற்கு தயாரானார்கள். ஆனால், அவர்கள் ஆயத்தமாவதற்குள் பஸ் உருண்டு சென்று, விமானத்தில் மோதி விட்டது. இதில் விமானத்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. விமான போக்குவரத்து அதிகாரிகள் சேதமடைந்த விமானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். 'கோ ஏர்' விமான நிறுவனமும் தனியே விசாரணையை தொடங்கி உள்ளது.
 
மும்பை விமான நிலையத்தில் இதுபோன்ற விபத்து நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2007-ல் ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஒன்று இந்தியன் ஆயில் டேங்கர் லாரி மீது மோதியது. இதில் 10 பயணிகள் காயம் அடைந்தனர்.
 
ஏப்ரல், 2008-ல் கிங் பிஷர் விமானம் ஒன்று, சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவை தவிர, அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்டு வருகின்றன.

0 கருத்துகள்: