தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

31.12.11

சவுதி அரேபியாவிற்கு எப் : 15 ஜெட்விமானங்கள் விற்பனை காரணமென்ன?


மத்திய கிழக்கு விரைவில் படு மோசமாக தீப்பற்றி எரியப்போகி றது. உலகப் பொருளாதார மந்தம் மத்திய கிழக்கை எரித்து வி ளையாடப்போகும் அபாயம் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பிக்கி றது. இந்தப் பிராந்தியத்தில் ஏற்படப்போகும் அமைதிக் குலைவு அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து அந்த நாட்டிற்கு எண்ணெயை வாரி வழங்கும் சவுதியின் அடி வயிற்றிலும் தீ வைக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சவுதிக்கு ஏப் : 15 இரக நவீன ஜெட் விமானங்கள் 84 ஐ விற்பனை செய்ய அமெரிக் கா இணங்கியுள்ளது. இதற்கான
ஒப்பந்தம் கைச்சாத்திடப்ப ட்டுள்ளது. மொத்தம் 29.4 பில்லியன் டாலர்களுக்கு இந்த ஜெட் விமானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
காரணங்கள் என்ன :
01. அடுத்த பத்தாண்டுகளுக்கு பாலஸ்தீனத்தில் அமைதி என்ற பேச்சுக்கே இடமில்லை. எதிர்ப்பாளர்களை களையெடுப்பதே நமது பணியாக இருக்கும் என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் அவிக்டோர் லிபர்மான் சென்ற வாரம் கூறியுள்ளார். பாலஸ்தீன பிரச்சனையில் மறைந்து நின்று செயற்படும் ஈரானை ஈராக் போல சிதைத்து சின்னாபின்னமாக்க பத்து ஆண்டுகள் தேவைப்படும் என்பது இதன் அர்த்தமாகும். மேலும் இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரஸ் சென்ற மாதம் ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்காது என்பதை மறுக்க முடியாது என்று கூறியிருந்தார்.
02. அமெரிக்க ஆளில்லா விமானமொன்றை அமெரிக்கரை விட விவேகமாக செயற்பட்டு ஈரானிய விஞ்ஞானிகள் தரையிறக்கிய அதிர்ச்சியில் இருந்தும் விறைப்பில் இருந்தும் அமெரிக்கா இன்னமும் விடுபடவில்லை. எனவே மத்திய கிழக்கில் அமைதியை அனுமதித்தால் ஈரான் அசைக்க முடியாத மத சர்வாதிகார வல்லரசாக மாறிவிடும். இந்த நெருப்பு சவுதிக்குள் பரவும், ஆகவே சவுதிக்கு ஜெட் விமானங்கள் அவசியம்.
03. ரஸ்யா மறுபடியும் உலக முதன்மை பெற விரும்புகிறது. ஆகவே இம்முறை வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவளிக்கும். ரஸ்ய தொழில் நுட்பமும், அமெரிக்க தொழில் நுட்பமும் மத்திய கிழக்கில் வெளிப்படையாக மோதப் போகின்றன. அமெரிக்கா விற்பனை செய்த விமானங்கள் பாலஸ்தீனத்தில் இனி அமைதி இல்லை என்பதை கோடி காட்டுகின்றன.

0 கருத்துகள்: