தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.1.12

ரஷ்யா:பகவத் கீதை தடைக்கோரும் மனுவின் பின்னணி என்ன?


மாஸ்கோ:ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள டோம்ஸ்க் நீதிமன்றத்தில் ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை தடைச் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பாராளுமன்றம் வரை பெரும் சர்ச்சை உருவானது. ஆனால் இதன் உண்மையான பின்னணியை குறித்து செய்தி வெளியாகவில்லை.

டோம்ஸ்க் நீதிமன்றத்தில் தடைச் செய்யக் கோரப்பட்ட நூல் ஹரே கிருஷ்ணா அமைப்பின் கிளையான இஸ்கோனின் ஸ்தாபகர் சுவாமி பக்திவேதாந்தாவின் ரஷ்ய மொழியிலான மொழிப்பெயர்ப்பாகும். ஹரே கிருஷ்ணா அமைப்பு ரஷ்யாவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய அமைப்பாகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வட்லானா அஹ்மந்த் ஜேவா என்ற பெண்மணி இவ்வியக்கத்தின் தலைவரான பாபாஜி தன்னை மிரட்டி பணம் பறித்ததாக டோம்ஸ் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.
இஸ்கோன் என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ள ஹரே கிருஷ்ணா அமைப்பின் மீது தொடுக்கப்பட்ட ஏராளமான புகார்களில் இதுவும் ஒன்று. அவற்றில் ஏழு வழக்குகளில் அரசு தரப்பு வழக்கு பதிவுச் செய்தது.
பாபாஜியின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீஸ் ஏராளமான போதைப் பொருட்களை கைப்பற்றியது. ரஷ்யாவில் தடைச் செய்யப்படாத ஸால்வியா டிவிநோரம் என்ற போதைப் பொருளை உபயோகித்து பாபாஜி தனது ஆதரவாளர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது ஸ்வட்லானாவின் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானதாகும்.
இவ்வமைப்பைச் சார்ந்த இன்னொரு பெண்மணி இரத்த நாள நரம்பை முறித்து தற்கொலைச் செய்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இஸ்கோன் அமைப்பைச் சார்ந்தவர்கள் பெருமளவில் ஹஷீஸ் என்ற போதைப் பொருளை உபயோகித்ததன் ஆதாரங்களும் வெளியாயின.
1980-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இஸ்கோன் அமைப்புகளில் சிறுவர், சிறுமியரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. 1983-ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் ஒரு நீதிமன்றம் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட  ஒரு குடும்பத்திற்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
ஆகவே ரஷ்யாவில் சர்ச்சையை கிளப்பியது பகவத் கீதை அல்ல. மாறாக சர்ச்சைக்குரிய சாமியார் பக்தி தேவானந்தாவின் மொழிப்பெயர்ப்பான பகவத்கீதை நூலாகும்.
நன்றி:தூது ஆன்லைன்

0 கருத்துகள்: