தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.1.12

அன்னாவின் நாடகத்தை மும்பை மக்கள் விரும்பவில்லை : பால் தாக்கரே


மும்பை : மும்பையில் ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் ஏன் மக்கள் ஆதரவில்லாமல் தோற்று போனது என்பது குறித்து அன்னா ஹசாரே தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.பால் தாக்கரே தன் கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் அன்னாவுக்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் கூட இத்தடவை எப்படி அன்னாவின் போராட்டம் பிசுபிசுத்தது என்பதையும் நூற்றுக்கணக்கான மக்களே வந்ததையும் பரபரப்பு செய்தியாய் வெளியிட்டதையும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் லோக்பால் தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே அன்னா உண்ணாவிரதம் இருந்தது தேவையற்ற ஒன்று என்று கூறிய தாக்கரே மக்கள் இயக்கத்தை நடத்துபவர்களுக்கு பொறுமை தேவை என்றும் கூறினார்.

மேலும் பால் தாக்கரே “ ஊழலை ஒழிப்பது என்பதை மக்கள் வரவேற்கவே செய்வார்கள். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அன்னா உண்னாவிரதம் இருந்து மிரட்டுவதை மக்கள் ரசிக்கவில்லை” என்றார்.

தில்லியில் ஜந்தர் மந்தரிலும் ராம்லீலாவிலும் அன்னா நடத்திய நாடகம் மும்பையில் எடுபடவில்லை என்று கூறிய தாக்கரே மஹாராஷ்டிரா மக்கள் இத்தகைய நாடகங்களை ரசிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

0 கருத்துகள்: